நியூயார்க்: நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் பகுதியில் உள்ள சாலையோர புல் பகுதியில்தான் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்க்கப்பட்ட புல் பகுதியின் மத்தியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார்.