புளோரிடா மாகாணத்தை நெருங்கும் மைக்கேல் புயல் : பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மிகவும் ஆபத்தான மைக்கேல் புயல் நெருங்கி வருகிறது. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 4-ம் நிலைப் புயலாக இது வலுப்பெற்றது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து அமெரிக்காவை இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ள நிலையில் 13-வது புயலாக மைக்லே் உருவெடுத்துள்ளது. இப்புயல் புளோரிடாவில் இன்னும் சில மணி நேரங்களில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலு குறையாமல் கரையைக் கடக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அளவு சேதம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், 13 அடி வரை கடலில் அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  புளோரிடாவில் அவசர நிலையை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஜார்ஜியா, அலபாமா மாநில மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அபாயகரமான புயல் என்பதால் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: