இளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெர்மி லலிரினுங்கா  தங்கப்பதக்கம் வென்றார். 62 கிலோ எடைப் பிரிவில் 247 எடையை  வெற்றிகரமாக தூக்கி ஜெர்மி முதல் இடம் பிடித்தார்.  இதில் இரண்டாவது இடம் துருக்கியை சேர்ந்த டாப்டாசுக்கு, மூன்றாவது இடம்  கொலம்பியாவைச் சேர்ந்த வில்லருக்கும் கிடைத்தது. இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதன்மூலம் ஜெர்மி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

16 வயதான ஜெர்மி இதற்கு முன்னர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பளு தூக்குதலில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். தங்கப்பதக்கம் வென்ற ஜெர்மிக்கு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றது குறித்து ராஜ்யவர்தன் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில், 62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.  வாழ்த்துகள் ஜெர்மி. இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் என்று பதிவிட்டிருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: