அவ்வையாருக்கும், அதியமானுக்கும் கள் படையல் வைக்க முயற்சி

தர்மபுரி: தமிழ்நாடு கள்  இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மற்றும் நிர்வாகிகள் 8 பேர், நேற்று  தர்மபுரி அதியமான் கோட்டத்தின் முன்பாக கள் படையலிட வந்தனர்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து  நிறுத்தினர். தடையை மீறி கள் படையலிட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்துநிறுத்தி நல்லசாமி உட்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக,  நல்லசாமி நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில்  மட்டும் தான் கள்ளுக்கு தடை உள்ளது. இந்த மண்ணில் வாழ்ந்த அதியமானும், அவ்வையாருமே கள் அருந்தியுள்ளனர். இதற்கு புறநானூறு  நூலில் வரலாற்று குறிப்புகள் உள்ளன. அதனால் அவ்வையாருக்கும்,  அதியமானுக்கும் கள்ளை படையலிட வந்தோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: