காவல் துறையின் தொழில் நுட்பப் பிரிவு போட்டித் தேர்வை தமிழில் நடத்த மறுப்பது முரண்பாடுகளின் உச்சம்: தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: போட்டி தேர்வை தமிழில் நடத்த மறுப்பது முரண்பாடுகளின் உச்சம் என்று தமிழக அரசு மீது ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறையின் கைரேகைப் பிரிவுக்கு 202 சார்பு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கான போட்டித் தேர்வுகள் எந்த மொழியில் நடத்தப்படும் என்று தேர்வர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்துள்ள சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும், தமிழில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறது. தேர்வு வாரியத்தின் இம்முடிவு தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 2015ம் ஆண்டு வரை காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு, கைரேகைப் பிரிவுக்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான போட்டித்தேர்வுகள் தமிழில் நடத்தப்பட்டு வந்தன.

அந்த நடைமுறையை கைவிட்டு ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் வழியில் படித்த, தமிழ் பேசும் பட்டதாரிகள் இந்தப் பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்படுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது. மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ் மொழியிலும் நடத்தப்பட்டது. அதேபோல் ஐ.ஐ.டிக்கான நுழைவுத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கோரி வருகிறது. ஒருபுறம் தேசிய அளவிலான தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக அரசு, தமிழகத்தில் நடத்தப்படும் போட்டித்தேர்வை தமிழில் நடத்த மறுப்பது முரண்பாடுகளின் உச்சமாகும். எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: