5 மாதம் 26 நாட்களில் உரிமையியல் நீதிபதி தேர்வு முடிவு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: உரிமையியல் நீதிபதி தேர்வுக்கான ரிசல்ட் 5 மாதம் 26 நாட்களில்  வெளியிடப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் 320 உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி முதல்நிலை எழுத்து தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 11 மற்றும் 12ம் தேதி முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. நேர்காணல் தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி வரை நடந்தது.

இதற்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் 5ம் தேதி அன்றே தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வுகளில் மிகக்குறுகிய காலத்தில், அதாவது 5 மாதங்கள் 26 நாட்களில் இத்தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: