ஜெர்மனியில் நடைபெற்ற வருடாந்திர பட்டம் விடும் திருவிழா கோலாகலம்

ஜெர்மனியில் வருடாந்திர பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெர்லினில் நடத்தப்பட்ட இந்த திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிகாட்டினர். இந்தத் திருவிழாவில் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். குறிப்பாக தங்கள் கலைநயத்தின் வெளிப்பாடாக பல வடிவங்களில் கண்கவர் விசித்திர பட்டங்களை அவர்களே வடிவமைத்து அனைவரின் பார்வைகளையும் கவர்ந்தனர்.

ஜெர்மனியில் டேடி பியர், டைனோசர், பன்றி என பல வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில், நூற்றுக்கணக்கான உருவங்களில், வானை மறைக்குமளவிற்கு பட்டங்கள் பறக்கவிடப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் மூத்தோர் வரை வயது பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: