நியூயார்க்: இந்தியாவில் பல்முனை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக ஐ.நா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச பல்முனை வறுமை பட்டியல் அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2005-2006லிருந்து 10 ஆண்டுகளின் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தவர்களில் சுமார் 27 கோடி பேர் வளர்ச்சியடைந்துள்ளனர்.