அமெரிக்கா வாழ் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டது குடியரசு கட்சி

ஹவுஸ்டன்: விநாயகர் சதுர்த்தி விளம்பரத்தால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சி இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டது. விநாயகர் சதுர்த்தி கடந்த 13ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கவரும் வகையில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது. அதில், ‘ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நீங்கள் கழுதையை வழிபட விரும்புகிறீர்களா? அல்லது யானையை வழிபட விரும்புகிறீர்களா? யானைக்கு பெரிய தலை, நிறைய சிந்திக்கலாம். நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்தையும் பார்க்கும் வகையில் பெரிய கண்கள், மற்றவர்களின் பேச்சைக் கேட்கும் வகையில் மிகப்பெரிய காதுகள், வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் வகையில் மிகப்பெரிய வயிறு மற்றும் அனைத்தும் உள்ளன’ என்று விநாயகர் படம் போட்டு அதில் அம்புகுறி போட்டு இவை குறிப்பிடப்பட்டு இருந்தன.

குடியரசு கட்சியின் சின்னம் யானை, ஜனநாயக கட்சியின் சின்னம் கழுதை. எனவே, இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், விநாயகரை இந்த விளம்பரம் அவமதித்து விட்டதாக அமெரிக்காவில் வாழும் இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன. ஹவுஸ்டனில் உள்ள இந்து அமெரிக்க அமைப்பின் வக்கீல்கள் இதுபற்றி குடியரசு கட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்தனர். இதையடுத்து, குடியரசு கட்சி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: