வடகொரியா உடனான உரசலை குறைக்க தாம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளேன்: டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு வடகொரியா உடனான உரசலை குறைக்க தாம் தீவிர நடவடிக்கை எடுத்திருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், தாம் அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னர் வடகொரியாவுடன் போரிடும் சூழல் நிலவி வந்ததாகவும், ஆனால் அந்த நிலை தற்போது இல்லை என்று அவர் தெரிவித்தார்.

வடகொரியா உடனான பதற்றத்தை தவிர்த்து நட்புறவை மேம்படுத்துவதற்கான பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதிபராக தாம் செய்த முயற்சியால் வடகொரியா தற்போது அணுஆயுத சோதனையை கைவிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அந்த நாடு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் அளவுக்கு மனம் மாறியிருப்பதாக அவர் பெருமைபொங்க தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: