பாகிஸ்தானுக்கு உளவு கூறிய எல்லை பாதுகாப்பு வீரர் கைது: பேஸ்புக் மூலம் வலைவீசிய பெண்

லக்னோ: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ,க்கு இந்திய ராணுவ ரகசியங்களை உளவு கூறிய எல்லை பாதுகாப்பு படை வீரரை உத்தர பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் கைது செய்தனர்.எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வரும் மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தை சேர்ந்த அச்சுதானந்த் மிஸ்ரா என்பவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு இந்திய ராணுவ ரகசியங்களை உளவு  கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2006ல் பிஎஸ்எப்.பில் சேர்ந்த மிஸ்ராவுக்கு, கடந்த 2016ல் ஐஎஸ்ஐ.யின் பாதுகாப்பு செய்தியாளராக அறியப்படும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இவர் போலீஸ் அகாடமி மற்றும் பயிற்சி மையத்தின்  பல்வேறு தகவல்களை அந்தப் பெண்ணிற்கு அனுப்பி வந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் பாகிஸ்தான் பதிவு கைபேசி எண் மூலமாக தொடர்ந்து வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ள மிஸ்ராவிடம் தீவிரவாத எதிர்ப்புப் படையினர், விசாரணை மேற்கொண்டனர். ஐஎஸ்ஐ பெண்ணையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: