நிலவிற்கு செல்ல போகும் ஜப்பான் கோடீஸ்வரர் : அறிவித்தது ஸ்பேஸ் எக்ஸ்

நியூயார்க்: ஜப்பானை சேர்ந்த யுசாகா மேசாவா என்ற கோடீஸ்வரர், வரும் 2023ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு பயணம் செய்ய உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் என்பவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி நிலவிற்கு மனிதனை அழைத்து செல்லும் திட்ட அறிவிப்பை நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியிட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அறிவித்து மேடையிலேயே அவரை அறிமுகமும் செய்து வைத்தார்.இதன்படி, நிலவிற்கு செல்லப் போகும் முதல் பயணி என்ற பெருமையை பெற்றிருப்பவர் ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா. கோடீஸ்வரரான இவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பை தொடர்ந்து, உலகம் முழுவதும் நேற்று பிரபலமானார். யுசாகா மேசாவா, சோசோடவுன் என்ற ஆன்லைன் பொருட்கள் விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறார். ஜப்பானில் உள்ள 17 மிகப்பெரிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவராவார். வரும் 2023ம் ஆண்டு இவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் பிக் ஹெவி ராக்கெட் மூலம் நிலவிற்கு செல்ல இருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: