தென் ஆப்ரிக்க வேகம் பார்னெல் திடீர் ஓய்வு

ஜோகன்னஸ்பர்க்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்ரிக்க வேகம் வேய்ன் பார்னெல் அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்க அணிக்காக 6 டெஸ்ட் போட்டியில் 15 விக்கெட், 65 ஒருநாள் போட்டியில் 94 விக்கெட் மற்றும் 40 டி20 போட்டியில் 41 விக்கெட் வீழ்த்தியுள்ள பார்னெல் (29 வயது), நேற்று தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார். இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் வொர்செஸ்டர் கிளப் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இனி ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரிமியர் லீக் போன்ற டி20 தொடர்களில் விளையாடவும் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும். அதன் பிறகு தென் ஆப்ரிக்க அணியில் இடம் பிடிக்க முடியாததுடன், 2018ம் ஆண்டுக்கான தேசிய அணி ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் பார்னெல் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: