வட கொரியாவிற்கு முதன்முறையாக சென்ற தென் கொரிய அதிபர் : அணு ஆயதங்களை கைவிடுவது குறித்து பேச்சுவார்த்தை

பியாங்யங் : வட கொரியாவிற்கு முதன்முறையாக சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னிற்கு பியாங்யங் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12ம் தேதி அமெரிக்கா அதிபர் ட்ரம்பிற்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கும் இடையே வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிராந்தியமாக உருவாக்குவதாக  வட கொரிய  அதிபர் கிம் ஜோங் உன் உறுதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து இரு நாட்டிற்கும் இடையே நட்புறவு சீரடைந்து வருகிறது. மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக தென்கொரியா பேச்சுவார்த்தை நடத்தி அதில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

Advertising
Advertising

அதன் அடிப்படையில் வடகொரியாவுடன் இருமுறை தென்கொரியா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் முதல்முறையாக வடகொரியா சென்றுள்ளார். தலைநகர் பியாங்யங் விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதும் வட கொரிய  அதிபர் கிம் ஜோங் உன், அவரை உற்சாகமாக கட்டியணைத்து வரவேற்றார். வட கொரியா அதிபராக கிம் ஜோங் உன், பதவியேற்ற நாளில் இருந்து இதுவரை எந்த ஒரு உலக நாட்டு தலைவர்களையும் அவர் விமான நிலையம் சென்று நேரடியாக வரவேற்றியது இல்லை. முதன்முறையாக தென்கொரியா அதிபரை நேரடியாக சென்று அவர் வரவேற்று இருப்பதால் கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சியில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: