பாகிஸ்தான் சிக்கன நடவடிக்கை : கடனுக்காக 8 எருமை, 34 சொகுசு கார் ஏலம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொறுப்பேற்றுள்ள இம்ரான் தலைமையிலான புதிய அரசு எடுத்து வரும் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 34 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டன.பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ₹16 லட்சம் கோடியாக இருந்த அந்நாட்டின் கடன், தற்பொழுது, ₹29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, புதிய அரசு, சிக்கன நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவையில்லாமல் வெறுமனே உள்ள அரசின் கார்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை விற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புல்லட் புரூப் வாகனங்கள் உள்ளிட்ட 102 சொகுசு கார்கள் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 34 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டன. இவை உள்நாட்டு தயாரிப்புகள். இதையடுத்து இரண்டாவது கட்டமாக 41 வெளிநாட்டு கார்கள் விற்கப்படவுள்ளன. மேலும் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் பயன்பாட்டிற்காக, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்ட 8 எருமைமாடுகளையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: