தர்மபுரி: தர்மபுரி டவுன் டெல்லி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த மூன்றரை வருடங்களாக பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் பிரம்ம கமலம் செடியிலிருந்து ஒரே நேரத்தில் 9 பூக்கள் பூத்தன. இதை அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர். இதுபற்றி மணிவண்ணன் கூறுகையில், கடந்த மூன்றரை வருடத்திற்கு முன்பு பிரம்மகமலம் செடியின் இலையை எங்கள் வீட்டில் உள்ள ஒரு தொட்டியில் நட்டு வைத்தோம்.
அந்த செடியில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பூக்கள் பூக்கின்றன. கடந்த ஜூலை 21ம் தேதி 14 பூக்கள் பூத்திருந்தன. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பிரம்ம கமலம் செடியில் ஒன்பது பூக்கள் மலர்ந்தன. பிரம்ம கமலம் பூ சிவனுக்கு உகந்தது என்பதால் இதை நாங்கள் தெய்வமாக வணங்கி வருகிறோம் என கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
