சென்னை: சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் சிறந்த பேரூராட்சி விருதை பெற்றது. 2-ம் இடத்தை தேனி பழனிசெட்டிப்பாளையம் பேரூராட்சியும், 3-ம் இடத்தை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியும் பெற்றது. 72-வது சுதந்திர தின விழா சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வங்கி கவுரவித்தார்.
