துருக்கி- அமெரிக்கா மோதல் போக்கால் ரூபாய் மதிப்பு கடும் சரிவு: ஒரே நாளில் ஒரு ரூபாய் போச்சு

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரே நாளில் ஒரு ரூபாய்க்கு மேல் குறைந்து வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

 அமெரிக்காவுக்கு எதிராக துருக்கி தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், தனது நாட்டு பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறார். பொருளாதார கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். இதனால், டாலருக்கு நிகரான துருக்கி லிரா மதிப்பு 12 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை சரிந்தது. நேற்று லிரா மதிப்பு 7.24 ஆக இருந்தது. இந்த ஆண்டில் மட்டும் துருக்கி லிரா மதிப்பு சுமார் 45 சதவீதம் சரிந்துள்ளது. இது உலக நாடுகளிலும் இதன் தாக்கம் பரவியது. குறிப்பாக வளரும் நாடுகளின் கரன்சி மதிப்புகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின. நேற்று வர்த்தக இடையில் ரூபாய் மதிப்பு உச்சபட்ச சரிவாக ரூ69.93ஐ தொட்டது. ரூ69.93 முதல் ரூ69.41 வரை வர்த்தகம் ஆனது. அதாவது ஏறக்குறைய 70 ரூபாய் என்ற அளவுக்கு இந்த சரிவு இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு வர்த்தக முடிவில் ரூ68.84 ஆக இருந்தது.

நேற்றைய உச்சபட்ச சரிவுடன் ஒப்பிடுகையில் ரூபாய் மதிப்பு 109 காசுகள் குறைந்துள்ளது. கடந்த 2013 செப்டம்பரில் ரூபாய் மதிப்பு ரூ69.49க்கு சரிந்ததே அதிகபட்சமாக கருதப்பட்டது. இதற்கு அடுத்ததாக 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வார இறுதியில், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்டும் அலுமினிய பொருட்களுக்கு 20 சதவீதமும், ஸ்டீல் பொருட்களுக்கு 50 சதவீதமும் இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்திருந்தது. ரூபாய் மதிப்பு சரிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் தங்கத்தின் விலை குறைந்தும் அதன் பலன் இந்திய மக்களுக்கு கிடைக்கவில்ைல. குறிப்பாக இறக்குமதியை சார்ந்துள்ள தொழில்துறையினர் கடும் பாதிப்பை அடைகின்றனர். எனவே, ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சந்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: