பெண் பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்டு வந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜோப் மேத்யூ, ஜான்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதில் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜோப் மேத்யூ, ஜான்சன் வி.மேத்யூ ஆகியோரை சரணடைய உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ் இருவரும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றமும் அவர்களது முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. அதோடு இருவரும் 13ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று ஆபிரகாம் வர்க்கீஸ் திருவல்லா நீதிமன்றத்திலும், ஜெய்ஸ் கே.ஜார்ஜ் கொல்லம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திலும் சரணடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: