தஜிகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: மலையேற்ற வீரர்கள் உட்பட 16 பேர் பலி?

துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியபோது ஏற்பட்ட விபத்தில் 13 மலையேற்ற வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. தஜிகிஸ்தான் நாட்டின் மிக உயரமான மற்றும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரக்கூடிய இஸ்மொய்லி சோமனி மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்ட 13 மலையேற்ற வீரர்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் அடிவார முகாமிற்கு திரும்பினர். முகாமை நெருங்கியபோது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

அப்போது அவசரமாக தரையிறக்க விமானி முயன்றுள்ளார். எனினும் ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 மலையேற்ற வீரர்கள், 3 விமானிகள் என அனைவரும் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்த பகுதிக்கு மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மலையேற்ற வீரர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: