சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படாதது குறித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பிறகுதான் நீதிபதி வருவார்களா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி அரசமைப்பு படிநிலை முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
