கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காந்தையாற்றில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பவானி அணையின் நீர்மட்டம் 96 அடியை எட்டியதையடுத்து காந்தையாற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் 20 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை தாண்டி ஆற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாலம் முழுவதும் மூழ்கும் பட்சத்தில் காந்தவயல் பகுதியில் உள்ள நான்கு மலை கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
