கொழும்பு: இந்தியா யு-19 அணியுடனான இளைஞர் டெஸ்ட் போட்டியில், இலங்கை யு-19 அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கொழும்புவில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (ஜூலை 17-20), டாசில் வென்று பேட் செய்த இலங்கை யு-19 அணி 70.3 ஓவரில் 244 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சூரியபண்டாரா அதிகபட்சமாக 69 ரன் எடுத்தார். நிஷான் பெர்னாண்டோ, நிபுன் தனஞ்ஜெயா, மெண்டிஸ் தலா 39 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்திய யு-19 பந்துவீச்சில் ஹர்ஷ் தியாகி, படோனி தலா 4 விக்கெட், அர்ஜுன் டெண்டுல்கர், ஜங்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.