குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்று தாய் தற்கொலை முயற்சி : திருப்பூரில் பரிதாபம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடும்ப தகராறில் தனது 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தாய் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலூரை சேர்ந்தவர் செந்தில் (40). முன்னாள் ஊராட்சி தலைவர். தற்ேபாது, கோன் வைண்டிங் மில் வைத்துள்ளார்.

இவரது மனைவி சிவரஞ்சனி (32). இவர்களுக்கு ஹரீஸ் (7) என்ற மகனும், ஹர்சிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். செந்தில், சிவரஞ்சனிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு சிவரஞ்சனி உடலில் தீவைத்து கொண்டு அலறி உள்ளார். சத்தம் கேட்டு செந்தில் சென்று சிவரஞ்சனி மீது பெட்சீட்டை போர்த்தி தீயை அணைத்துள்ளார்.மேலும் 2 குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி  ஹரீஸ், ஹர்சிதா இருவரையும் தூக்கி சென்று வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுள்ளார். அதன்பிறகு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: