கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை 4 வாரத்தில் இருந்து 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. முதல் டோஸ் ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2வது டோஸ் போடும் காலத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தடுப்பூசிகள் இடையே கால அளவை நீட்டிப்பதால் கூடுதல் பலம் அளிப்பதாக கடிதத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. தேசிய தடுப்பூசி குழுவின் சிறப்பு உறுப்பினர்கள், தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கு இந்த கடிதத்தினை அனுப்பியுள்ளார். இது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டும் தான் பொருந்தும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டதிற்கு பிறகு 28 நாட்கள் கழித்து அதாவது 4 வாரங்களுக்கு பிறகு தான் 2வது டோஸ் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த 4 வாரங்களை 6 லிருந்து 8 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரையானது வழங்கப்பட்டுள்ளது.தேசிய தடுப்பூசி குழுவின் சிறப்பு உறுப்பினர்கள், தொழில்நுட்ப ஆலோசனை குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க அறிவுறுத்தியுள்ளனர். கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே இது பொருந்தும். கோவாக்சின் மருந்துக்கு இது பொருந்தாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேபோல 8 வாரத்திற்கு மேலாகவும் கொண்டு செல்லாதீர்கள் என்ற அறிவுரையையும் கொடுத்துள்ளனர். 4 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்துவதை விட 6 லிருந்து 8 வாரங்களுக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தும் போது அதனுடைய வீரியம் அதிகமாக உள்ளது. கொரோனாவிற்கு எதிரான செயல்பாடு சிறப்பாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் உடனடியாக இதனை கடைபிடிக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: