1000 கோடி சம்பாதித்த அதிமுக எம்எல்ஏ: வாட்ஸ்அப்பில் வைரலான மாஜி எம்எல்ஏவின் பேச்சு

திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவர் மணல் கொள்ளை உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ரூ.1,000 கோடி வரை கொள்ளையடித்து விட்டதாக முன்னாள் எம்எல்ஏவின் உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவுகிறது.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் (தற்போதும் அதிமுகவில் தான் இருக்கிறார்), தினகரன் அணி நிர்வாகி ஒருவரிடம் போனில் பேசும் உரையாடல் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. அதில் முன்னாள் எம்எல்ஏ கூறும்போது, ‘நான் சிபாரிசு செய்யும் ஆட்களுக்கு 15 பசுமை வீடுகள் ஒதுக்க வேண்டும் என கேட்டு அனுமதி வாங்கி வந்து விட்டேன். தற்போதைய எம்எல்ஏ, கட்சிகாரர்களுடன் சேர்ந்து ரூ.1000 கோடி வரை கொள்ளையடித்து விட்டார்.

மணல் கொள்ளையிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். மணல் கொள்ளைக்கு தாசில்தாரே ஒத்துப்போகிறார். இதற்காக அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு வெள்ளி குத்து விளக்கு மட்டும் எம்எல்ஏ கொடுத்துள்ளார். அந்த தாசில்தார் திருச்சியில் குடியிருக்கிறார். இவ்வாறு உரையாடல் போகிறது.போனில்பேசும் இந்த முன்னாள் எம்எல்ஏவும் ஒரு முறை பதவியில் இருந்தவர். அவர் குற்றம் சாட்டும் தற்போதைய எம்எல்ஏ இப்போது 2ம் முறையாக எம்எல்ஏவாக உள்ளார்.

முன்னாள் எம்எல்ஏவின் இந்த வாட்ஸ் அப் பேச்சு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: