திருச்சியில் பலத்த காற்றுடன் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி: திருச்சியில் நேற்றிரவு காற்றுடன்  மழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்வினியோகம் தடைபட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 21ம் தேதி மாலை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த வந்து மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் மற்ற நாட்களை காட்டிலும் அதிகமாக வாட்டிவதைத்தது.

இதனால் மதிய நேரத்தில் முக்கிய சாலைகளில் வாகன நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் திருச்சி கன்டோன்மென்ட், கருமண்டபம், ரயில்நிலையம், மத்திய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டது. சிறிது நேரத்தில் மின்விநியோகம் சரி செய்யப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: