‘அசாமில் பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது’!: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரச்சாரம்..!!

டிஸ்பூர்: அசாமில் பிரிவினையை தூண்டிவிட்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி எடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு மார்ச் 27 முதல் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பாஜக தலைமையில் அசாம் கணபரிஷத், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி ஆகியவை அணி சேர்ந்திருக்கின்றன. காங்கிரஸ் தலைமையில் அகில இந்திய ஜனநாயக முன்னணி, போர்டோலாண்ட் மக்கள் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அணி சேர்ந்திருக்கின்றன. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அசாமில் பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாக பூபேஷ் பாகல் எச்சரித்துள்ளார். அனைத்து சமூக மக்களும், ஓரணியாக திரண்டு காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அசாமில் பிரதமர் மோடியும், ராகுல்காந்தியும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அம்மாநிலத்தில் குடியேறிய வங்கதேச முஸ்லீம்கள் பிரச்சனையை குறிவைத்தே பாஜக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமியர்கள் ஆதிக்கம் உள்ள அகில இந்திய ஐக்கிய முன்னணி தலைவர் சவுருத்தின் அஜ்மலை குறிவைத்தே பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அசாமில் பூர்வ குடிகள் கொண்ட அசாம் கணபரிஷத் கட்சி பாஜக-வுடன் கைகோர்த்துள்ளது. அதே நேரத்தில் அசாமில் வசிக்கும் ஆதிவாசிகள், பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. …

The post ‘அசாமில் பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது’!: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: