ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புழுதி புயல் : 150 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வீசிய சக்திவாய்ந்த புழுதி புயலுக்கு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களில் நேற்று இரவு வீசிய சக்திவாய்ந்த புழுதி புயலுக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர். பரத்பூர், அல்வார், தோல்பூர், ஜூன்ஜூனு, பைகானீர், ஆகிய நகரங்களில் நேற்றிரவு பலத்த இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை ஓய்ந்த சில நிமிடங்களில் இந்தப் பகுதிகளை புழுதிப் புயல் தாக்கத் தொடங்கியது. சாலையில் இருந்த வாகனங்கள், மரங்கள், மின் கம்பங்கள் அனைத்தையும் புழுதிப் புயல் சூறையாடியது.

100க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 1000 மேற்பட்ட மின் கம்பங்கள் சூறையாடப்பட்டுள்ளது.ஏராளமான மரங்கள் முறிந்ததுடன், வீடுகளும் பலத்த சேதம் அடைந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். புழுதிப் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தர பிரதேசத்தில் வீசிய புழுதி புயலுக்கு 69 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புழுதிப் புயல் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் விரைவுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர்கள்  உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: