மநீம துணை தலைவர் மகேந்திரன் சொத்து மதிப்பு 170 கோடி

கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன், நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து மதிப்பு ரூ.170 கோடி என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் அசையும் சொத்து ரூ. 10 கோடி, அசையா சொத்து ரூ. 160 கோடி என குறிப்பிட்டுள்ளார். எம்.பி.பிஎஸ், எம்டி படித்துள்ள டாக்டர் மகேந்திரனின் ஆண்டு வருமானம் ரூ. 56 லட்சம். அவரிடம் 3 கிலோ 850 கிராம் தங்க நகைகள் உள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 1.59 கோடி. இதுபோக பொள்ளாச்சி பகுதியில் சுமார் 90 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதுதவிர  8 லட்சம் சதுரடி நிலம், கட்டிடங்களுக்கு சொந்தக்காரர். இதன் மதிப்பு மட்டுமே ரூ.149 கோடி. …

The post மநீம துணை தலைவர் மகேந்திரன் சொத்து மதிப்பு 170 கோடி appeared first on Dinakaran.

Related Stories: