டெல்லி அரசாங்க பள்ளிகளில் மினி டிபன் திட்டம் அறிமுகம்

புதுடெல்லி: குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் விதமாக,டெல்லி அரசு பள்ளிகளில் மினி சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு ஆம் ஆத்மி செய்துள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசு  பள்ளி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை காத்து ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் விதமாக அடுத்த முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி மதிய உணவுக்கு முன்பாக மினி சிற்றுண்டி இடைவேளை திட்டத்தை அறிமுகம் செய்யப்படுகிறது.இதுகுறித்து மாநில கல்வி இயக்குநரகம் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மினி டிபனில் தினசரி மூன்று விதமான உணவு தேர்வுகள் இடம் பெற வேண்டும். அவற்றில் அந்தந்த சீசனில் கிடைக்கக் கூடிய பழங்கள், முளைகட்டிய பயிறுகள், சாலட், வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post டெல்லி அரசாங்க பள்ளிகளில் மினி டிபன் திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: