தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443ஆக அதிகரிப்பு!!

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443-ஆக அதிகரித்துள்ளது.கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்ததால், சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

The post தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: