மணல் கடத்தல் வாலிபர் கைது

புழல்: சோழவரம் அடுத்த விஜயநல்லூர் ஜிஎன்டி சாலையில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு உதவி ஆய்வா ர் கலைத்தோழன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சோழவரத்தில் இருந்து சென்னை நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.  அதில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார்  லாரியை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜிவ்காந்தி(28) எனத் தெரியவந்தது. இதையடுத்து, சோழவரம் போலீசார் அவரை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும், மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்….

The post மணல் கடத்தல் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: