கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சிகாலத்தில் கிடப்பில் போடப்பட்ட ஆற்றங்கரை சாலை-மேம்படுத்த வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையின் வலதுகரை சாலை காட்டூர் முதல் அணைக்கரை வரை மேம்படுத்தப்பட்டு, தார்சாலை ஆக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகிறது. அதன் பின்னர் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த சாலை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாகவும், ஜல்லிகள் பெயர்ந்தும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இந்த சாலை மிகவும் மோசமாக இருப்பதால் மகேந்திரப்பள்ளி, முதலைமேடு, அளக்குடி, திட்டுபடுகை, நாவல் படுகை, நாணல்படுகை, சந்தப் படுகை,சரஸ்வதிவிளாகம், கொன்னகாட்டுபடுகை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.கொள்ளிடம், சீர்காழி மற்றும் சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் இந்த சாலை மிகவும் மோசமாக இருப்பதால் மிகவும் சிரமத்துடன் இருந்து வருகின்றனர். காட்டூர் கிராமத்திலிருந்து வடரங்கம் வரை 25 கி.மீ தூரத்திற்கு இந்த ஆற்றங்கரை சாலை படுமோசமாக உல்ளது. டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இந்த சாலையை மேம்படுத்த உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு 50 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது….

The post கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சிகாலத்தில் கிடப்பில் போடப்பட்ட ஆற்றங்கரை சாலை-மேம்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: