புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை நேற்று முன்தினம் அவரிடம் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. இந்நிலையில், அவரை விசாரணைக்காக நேற்று அலுவலகம் வரும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் கொரோனோ கட்டுப்பாடுகளை சுட்டிக் காட்டி அவர் விசாரணைக்கு செல்லவில்லை. இதையடுத்து டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் 2வது நாளாக நேற்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வதேராவின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு அளிப்பதால், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு அவரது கணவர் வதேரா மீது வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது….
The post ராபர்ட் வதேராவிடம் 2ம் நாளாக விசாரணை appeared first on Dinakaran.