விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா. கடந்த 1995ம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்த அவர் அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2013ம் ஆண்டு முதல் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய அவர் நடன இயக்குனர் ராபர்ட் இயக்கிய ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’, ‘ஹரா’, ‘அந்தகன்’ ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் வனிதா அளித்த பேட்டியில் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘எனது முதல் காதல் பற்றி இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார்? அல்லது நான் யாரை முதன் முதலில் காதலித்தேன் என்பதை என்னால் வெளியே சொல்ல முடியாது.
அப்படி நான் அந்த உண்மையை சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும். அதனால் அதை சொல்லாமல் நான் மவுனமாக இருப்பதே நல்லது. எனது முதல் காதலை சொல்லாமலே பல வருடங்களை நான் கடந்து வந்துவிட்டேன். எனது நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டுமே இருக்கும். முதல் காதல் ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு மட்டுமே தெரியும்’ என்று தெரிவித்துள்ளார். வனிதாவின் இந்த பேச்சு, பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
