விமானி இயக்கி நடிக்கும் ‘போட்டோகிராபர்’

தமிழில் ‘ரா’ என்ற படத்தில் அறிமுகமான விமானி அஷ்ரஃப் தற்போது நடித்துள்ள படம், ‘போட்டோகிராபர்’. அவரது ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். மற்றும் கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், ‘உறியடி’ சிவா, தேவி மகேஷ், ஜே.பி.ஜெய், வேல.ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். உலகில் தனி அடையாளத்தை நிரூபிக்க போராடும், மன உளைச்சல் மற்றும் அதீத வெறிகொண்ட வீரா என்ற போட்டோகிராபரை சுற்றி கதை நடக்கிறது. மதிகெட்டான்சோலை என்ற மர்மங்கள் நிறைந்த அடர்ந்த காப்பக காட்டுக்குள் செல்லும் ஹீரோ, தனது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு அரிய இயற்கை நிகழ்வை போட்டோ எடுக்க முயற்சிக்கிறார்.

ஆனால், அவரது தேடலே அவரது உயிர் பிழைப்புக்கான வேட்டையாக மாறுகிறது. ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்ய, ராஜ்குமார் சந்திரசேகரன் இசை அமைத்துள்ளார். ஆர்.சி.பிரணவ் எடிட்டிங் செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். மனிதனின் பேராசை, கடந்த கால ரணங்கள், விவரிக்க முடியாத மர்மங்களுடன் சைக்கலாஜிகல் சர்வைவல் மிஸ்ட்ரி திரில்லர் கதையுடன் படம் உருவாகியுள்ளது. ஏபிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் எஸ்.அப்துல் பாசித் தயாரிக்க, அஷ்ரஃப் இயக்கியுள்ளார்.

Related Stories: