கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ அமமுகவில் போட்டியா?

குடியாத்தம்: வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதியிலிருந்து சில ஊராட்சிகளை பிரித்து கடந்த 2008ல் கே.வி.குப்பம் சட்டமன்ற (தனி) தொகுதியாக உருவாக்கப்பட்டு, 2011ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார், பின்னர் 2016ம் ஆண்டில் அதிமுக சார்பில் லோகநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி மாநில தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுகவை சேர்ந்தவருக்கு சீட் வழங்கக்கோரியும் அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது எம்எல்ஏவாக இருக்கும் லோகநாதன் கடும் அதிருப்தியில் உள்ளார்.இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர், காட்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்தார். ஆனால், கே.வி.குப்பம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மேலும், தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினருக்கு சீட் வழங்காததால், அதிமுகவை சேர்ந்தவர்கள் டிடிவி தினகரனை சந்தித்து வருகின்றனர். அதன்படி தற்போது கே.வி.குப்பம் சிட்டிங் எம்எல்ஏ ஜி.லோகநாதன் அமமுகவில் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான் கே.வி.குப்பம் தொகுதியில் டிடிவி தினகரன் வேட்பாளரை அறிவிக்கவில்லை என தெரியவருகிறது. …

The post கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ அமமுகவில் போட்டியா? appeared first on Dinakaran.

Related Stories: