மனதில் பட்டதை பேசும் சம்யுக்தா

தமிழில் ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’, ‘பப்பி’, ‘தேள்’, ‘மன்மத லீலை’ ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னடம் மற்றும் தெலுங்கில் படங்களிலும் நடித்து வரும் இவர் இந்தியில் வெப் தொடர்களிலுல் நடித்து வருகிறார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே. சோஷியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைப்பயண அனுபவங்கள் குறித்து அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது புதிய வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில், ‘கடந்த ஆண்டு இறுதியில் நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன். நான் கனவு கண்ட வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகிறேன். பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். மும்பை எனக்கு புதிய வேலை வாய்ப்புகளின் கதவுகளை திறந்துள்ளது.

அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறேன். நான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவள். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் என்னை மாற்றி கொள்ள மாட்டேன். நேர்மை மற்றும் விசுவாசத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். ஒரு இளம் நடிகையின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Related Stories: