சென்னை: பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகிவரும் படம் ‘பகையறு’ இப் படத்திற்கான பாடல்களை எழுதி இசையமைத்து, தயாரித்துள்ளார் சதா. முருகன் படத்தின் இயக்குனர் செ. ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – சி. ஆர். புவனேஷ், ஸ்டன்ட் – அசால்ட் மதுர. யாசர், திவ்யா கிருஷ்ணன், மணிமாறன், ரஞ்சன், ஹலோ கந்தசாமி, புவனா, நேத்ரா என பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியது: கற்காலம் தொடங்கி கலிகாலம் வரை இச்சமூகத்தில் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்ணினமே. அப்படி பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி, தனது காயங்களுக்கான மருந்தாக எதை தேர்வு செய்கிறாள் என்பதே கதை. தற்போதைய சூழலை இது பிரதிபலிப்பதாக யதார்த்தமான கதையாக அமைந்துள்ளது. விரைவில் படம் திரைக்கு வரும் என்றார்.
