சிவராத்திரியில் தொடங்கும் கதை தி ஒன்

சென்னை: ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஒன் : வித்தின் யூ’, ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த திரைப்படமாகும். கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் கண்கவர் பின்னணியில் அதே நேரத்தில் கணிக்க முடியாத இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. சிவராத்திரியன்று, முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளை கொண்ட நான்கு மனிதர்கள், எதிர்பாராத சம்பவங்களின் தொடர் மூலம் எவ்வாறு ஒரு அசாதாரணமான நிகழ்வுகளுக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது.

லிஜோமோல் ஜோஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ”பருத்திவீரன்” சரவணன், பாவல் நவகீதன் மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் களியமூர்த்தி, ஜே.எஸ். கவி, ஸ்ரீதர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர் மற்றும் ஸ்மிருதி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – வினோத் ராஜா. எடிட்டர் – சி.எஸ். பிரேம்குமார். ஹரிஷ்னி பிக்சர்ஸ் சார்பில் கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Related Stories: