பெண் மீது அவதூறு: கெனிஷாவுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

துபாய், ஜூன் 7: நடிகர் ரவி மோகனின் தோழியும், பாடகியுமான கெனிஷாவுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜா நகரில் வசித்த இந்திய பெண் ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக, சோஷியல் மீடியாக்களில் அவதூறு பரப்பியதாக கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் மீது அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆன்லெட் மெர்லின் அளித்த புகாரின் அடிப்படையில் கெனிஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம். கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை என்பதால் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தலா 5 ஆயிரம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories: