×

மீனம்

அடுக்கடுக்காக தோல்வி வந்தாலும் அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டும் வேங்கைகளான நீங்கள், தளராத தன்னம்பிக்கையால் தடைகற்களை படிக்கட்டுக்களாக்கி பயணிப்பவர்கள். சூரியன் 4ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கூடுதல் அறை அமைப்பது, கழிவு நீர், குடி நீர் குழாயை மாற்றி அமைப்பது, மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். 8ம் குரு நிற்பதால் யாருக்கு ஜாமீன், காரெண்டர் கையெழுத்து போடாதீர்கள். அரசாங்க காரியங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சனிபகவான் பத்தில் நிற்பதால் புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். ஆனால் அதிக முதலீடு செய்ய வேண்டாம். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவியுண்டு. ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க முற்படுவீர்கள். 5ம் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6ல் மறைவதால் மனைவியின் உடல் நிலை பாதிக்கும்.

மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, முதுகு வலி வந்துப் போகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படும். வீடு கட்டுவதற்கு அனுமதி தாமதமாக கிடைக்கும். செவ்வாயும், கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாரின் ஆசீர்வாதமும் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். மாணவர்களே! விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! நட்பு வட்டத்தில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள்.

தள்ளுபடி விற்பனை மூலமாக புதிய வாடிக்கையாளர்களை உங்கள் பக்கம் இழுப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சலிப்பு, வெறுப்பு நீங்கும். பங்குதாரர்களுடன் இருந்த அதிருப்தி விலகும். ஸ்டேஷனரி, துணி, மின்சார சாதனங்களால் லாபம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட பழைய பிரச்னைகள், வழக்குகள் சாதகமாகும். உத்யோகத்தில் தொந்தரவு கொடுத்த அதிகாரி மாறுவார். உங்களைப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் வருவார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். உத்யோகத்தின் பொருட்டு சிலர் குடும்பத்தை பிரிய வேண்டிய சூழல் வரும். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். புதிய இளைய கலைஞர்கள் மூலமாக வெற்றியடைவீர்கள். விவசாயிகளே! மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த பகைமை நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் ஜூலை 3, 7, 8, 10, 12, 13, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 22ம் தேதி மாலை 6 மணி முதல் 23, 24ம் தேதி வரை.

பரிகாரம்:

சிதம்பரத்திற்கு அருகேயுள்ள புவனகிரி ராகவேந்திரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள்.வயதானவர்களுக்கு செருப்பு மற்றும் குடை வாங்கிக் கொடுங்கள்.

Tags :
× RELATED மேஷம்