×

துலாம்

வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு 8ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு அலைச்சலை தந்த சூரியன் இப்போது 9ல் நுழைந்திருப்பதால் ஓரளவு அலைச்சல் குறையும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கலும் வரும். அரசு விவகாரங்களிலும் அலட்சியம் வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் உதவிகள் வந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். 3ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பணவரவு திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும்.

அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும்.  செவ்வாயும், கேதுவும் 4ல் சேர்ந்து நிற்பதால் பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்படி செயல்படுங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ஜென்ம குரு தொடர்வதால் உடல் நலக்குறைவு ஏற்படும். வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகம் நீர் அருந்துங்கள். யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் உண்டாகும். தொடக்கத்திலேயே நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரம் செழிக்கும். தள்ளிப்போன ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும்.

பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுப்படுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றியடையும். பழைய வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பள பாக்கி தொகையும் கைக்கு வரும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். விவசாயிகளே! மரப் பயிர், எண்ணெய் வித்துக்களால் லாபம் வரும். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 17, 18, 19, 20, 21, 27, 28, 29 மற்றும் ஜூலை 1, 5, 6, 7, 8, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 9ம் தேதி காலை 9.24 மணி முதல் 10, 11 ம் தேதி நண்பகல் 12.56 மணி வரை.

பரிகாரம்:

சித்தூருக்கு அருகேயுள்ள காணிப்பாக்கம் விநாயகரை சென்று தரிசனம் செய்யுங்கள். ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள்.

Tags :
× RELATED மேஷம்