×

சிம்மம்

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாதவர்கள். உங்களுடைய ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் நுழைந்திருப்பதால் இந்த மாதம் முழுக்க நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். தடைப்பட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கால் வலி, கழுத்து வலி, முட்டு வலி குறையும். முகப்பொலிவுக் கூடும். கோபம் குறையும். சங்கம், இயக்கம் இவற்றில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளும் அதிகமாகும். 3ல் குரு நிற்பதால் சில விஷயங்களை போராடி முடிக்க வேண்டியது வரும். சொந்தம்பந்தங்களின் வருகையால் கையிருப்பு கரையும். அரசு காரியங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும்.

5ல் சனி நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து பராமரிக்க வேண்டி வரும். கேதுவும், செவ்வாயும் வலுவாக இருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வேற்றுமதம், மொழியினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் அழகு, இளமைக்கூடும். புதிதாக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன்  மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரசியல்வாதிகளே! எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். தலைமையுடன் நெருக்கமாவீர்கள். மாணவர்களே! உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும்.

புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். வசதி, வாய்ப்பு, நல்ல பின்னணி உள்ள பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். ஏற்றுமதிஇறக்குமதி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிக சம்பளத்துடன் பதவி உயர்வு, உங்களுக்கு தகுந்த இடமாற்றமெல்லாம் கிடைக்கும். கலைத்துறையினரே! பெரிய பெரிய வாய்ப்புகள் கூடி வரும். விருது, பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். மகசூல் ரெட்டிப்பாகும். வீட்டில் நல்லது நடக்கும். எதிர்பாராத வெற்றிகளை சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 22, 23, 24, 30, 31 மற்றும் ஜூலை 1, 2, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 4ம் தேதி இரவு 8.16 மணி முதல் 5, 6ம் தேதி வரை.

பரிகாரம்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த மகனுக்கு உதவுங்கள்.

Tags :
× RELATED மேஷம்