×

கன்னி

எதிராளிகளையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்கள். கடந்த ஒரு மாதகாலமாக உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து மனக்கஷ்டங்களையும், பணத்தட்டுப்பாட்டையும் தந்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். செல்வாக்குக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குரு 2ல் நிற்பதால் உங்களின் செல்வாக்கு
உயரும். உங்கள் பேச்சுக்கு தனிமரியாதை கிடைக்கும்.

பிள்ளைகளின் வருங்காலத்தை எண்ணி அவ்வப்போது கவலைப்பட்டீர்களே, இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துவார்கள். 4ல் அமர்ந்திருக்கும் சனியால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். இந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். குழம்பிக் கொண்டிருந்த நீங்கள், தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் இவற்றையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாயும், கேதுவும் 5ல் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். என்றாலும் சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலரின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளே! போராடி பதவியை தக்க வைத்துக் கொள்வீர்கள். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். ஞாபக சக்தி கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். கடையை விரிவுப்படுத்தி அழகுப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உங்களுடைய புதுத் திட்டங்களை ஆதரிப்பார்கள். வேலையாட்கள் உங்கள் மனதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். உத்யோகத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். இடமாற்றங்கள் வரும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் கூடி வரும். உங்களின் யதார்த்தமான படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். போராட்டங்களை கடந்து சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:


ஜூன் 15, 16, 17, 23, 24, 25, 26, 28 மற்றும் ஜூலை 3, 4, 5, 6, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 7, 8, 9ம் தேதி காலை 9.23 மணி வரை.

பரிகாரம்:


கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆவூர் பஞ்ச பைரவர்களை தரிசியுங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

Tags :
× RELATED மேஷம்