×

தனுசு

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். ராசிக்கு 11ம் வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடும். மன தைரியம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். செலவினங்களும் அதிகமாகும். தூக்கம் குறையும். லேசாக கண் எரிச்சல், தொண்டை புகைச்சல் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. ஜன்மச் சனி நடைபெறுவதால் யாருக்கும் உறுதி மொழி தர வேண்டாம். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புது வேலை கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

செவ்வாயும், கேதுவும் 2ல் நிற்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். என்றாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். கண் எரிச்சல் வந்து நீங்கும். ஒருவித படபடப்பும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவி உங்களின் புது முயற்சியை பாராட்டுவார். வீடு, மனை வாங்குவது, விற்பதும் லாபகரமாக அமையும். என்றாலும் தாய் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தன்னம்பிக்கை கூடும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிதாக வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். சகோதரருடன் இருந்து வந்த மனவருத்தமும் நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும்.

மாணவர்களே! மதிப்பெண் உயரும். நினைவாற்றல் கூடும். ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலையாட்களையும் சேர்ப்பீர்கள். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். ரியல் எஸ்டேட், பெட்ரோகெமிக்கல், மர வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சம்பள பாக்கி கைக்கு வரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். சிலர் அலுவலகம் சம்பந்தமாக வெளிநாடு சென்று வருவீர்கள். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகள் தீரும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 21, 22, 23, 24 மற்றும் ஜூலை 1, 2, 3, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 16ம் தேதி காலை 7.16 மணி முதல் 17,18ம் தேதி காலை 9.40 மணி வரை மற்றும் ஜூலை 13ம் தேதி பிற்பகல் 3.23 மணி முதல் 14, 15ம் தேதி மாலை 5.52 மணிவரை.

பரிகாரம்:

உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஷீர்டி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்றளவு உதவுங்கள்.

Tags :
× RELATED மேஷம்