×

மிதுனம்

கரைப்பார், கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், இங்கிதமான பேச்சால் மற்றவர்கள் மனதில் எளிதில் இடம் பிடிப்பவர்கள். ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் செல்வதால் உற்சாகம் பொங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். நல்ல மருத்துவர் அறிமுகமாவார். நோயின் தாக்கம் குறையும். ஆனால் உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும். தூக்கமும் கொஞ்சம் குறையும். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ அல்லது உங்களை விமர்சித்துப் பேசினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது. விவாதங்களையும் தவிர்க்கப் பாருங்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக இருப்பதால் பிள்ளை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். மகளுக்கு நல்லபடியாக திருமணம் முடியும்.

மகனுக்கிருந்த கூடாப்பழக்கம் விலகும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த உரசல்கள் விலகும். 7ம் வீட்டில் சனியும், ராசிக்கு 8ம் வீட்டில் நிற்கும் கேதுவுடன், செவ்வாயும் சேர்ந்திருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதரங்களுடன் மனத்தாங்கல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே கொஞ்சம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வரக்கூடும். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை வரம்பு மீறி தாக்கிப் பேச வேண்டாம்.

மாணவர்களே! உயர்கல்வி விஷயத்தில் இருந்த குழப்பம் நீங்கும். போராடி விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். கன்னிப் பெண்களே! உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து இந்த மாதத்தில் விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழம், காய்கறி, கட்டிட உதிரி பாகங்கள், வாகனம் மூலமாக லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் விரும்பத்தக்கதாக இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலைப் பார்க்க வேண்டி வரும். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். பணபலம் உயரும். விவசாயிகளே! வரப்புச் சண்டையைப் பெரிதாக்காதீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ள வேண்டாம். தன் பலவீனங்களை சரி செய்துக் கொள்ள வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 17, 18, 19, 20, 25, 26, 27, 28 மற்றும் ஜூலை 5, 6, 7, 8, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 30 மற்றும் ஜூலை 1, 2ம் தேதி காலை 10.05 மணி வரை.

பரிகாரம்:

சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

Tags :
× RELATED மேஷம்