×

விருச்சிகம்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்துக் கொள்வீர்கள். புதன் சாதகமான
நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பிள்ளைகளால் நிம்மதியுண்டு. நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் இப்போது 8ல் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசாலும் அனுகூலம் உண்டு. ஆனால் தந்தையாருக்கு அலைச்சல் அதிகரிக்கும். 12ல் குரு நிற்பதால் பணப்பற்றாக்குறை, வீண் செலவு, டென்ஷன் வந்துபோகும். பிரபலங்களின் நட்பை இழக்க நேரிடும். வருங்காலத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். சனி 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். கண் எரிச்சல், கட்டை விரலில் அடிப்படுதல் வந்துப் போகும். சில நாட்களில் தூக்கம் குறையும்.

செவ்வாயும், கேதுவும் 3ம் வீட்டில் சேர்ந்து நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். வீடு கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சி பலிதமாகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்து விஷயங்களை வெளியிட வேண்டாம். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள்.

மாணவர்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. கமிஷன், ஸ்டேஷ்னரி, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் பெருகும். புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கிருந்த எதிர்ப்புகள் நீங்கும். இடமாற்றம் உண்டு. சூரியன் மறைந்திருப்பதால் அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே! பம்பு செட் பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரருடன் பகைமை வேண்டாம். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 19, 20, 21, 22, 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 15, 16ம் தேதி காலை 7.15 மணி வரை மற்றும் ஜூலை 11ம் தேதி நண்பகல் 12.57 மணி முதல் 12,13ம் தேதி பிற்பகல் 3.22 மணி வரை.

பரிகாரம்:

சென்னை திருவேற்காடு மாரியம்மனை தரிசித்து வரச் சொல்லுங்கள். சாலைப் பணியாளர்களுக்கு மோர் கொடுங்கள்.

Tags :
× RELATED மேஷம்