ஒரே நேரத்தில் பலருடன் ரிலேஷன்ஷிப்: மிலிந்த் சோமனை பிரிந்த நடிகை பரபரப்பு பேட்டி

மும்பை: கடந்த 2008ல் ‘ராக் ஆன்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர், ஷஹானா கோஸ்வாமி (40). நடிகர் மிலிந்த் சோமனை காதலித்து வந்த அவர், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013ல் அவரை விட்டு பிரிந்தார். தங்களின் காதல் பிரிந்தாலும், இறுதிவரை ஒருவரையொருவர் ஆழமாக நேசித்ததாகவும், தங்களுக்குள் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருந்ததால் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் சொல்லியிருந்தார்.

இந்நிலையில், தனது காதல் வாழ்க்கை குறித்து யூடியூப் பேட்டியில் ஷஹானா கோஸ்வாமி அதிர்ச்சியூட்டும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘நான் யாருடனும் ஒரே ஒரு காதல் உறவில் இருக்கவில்லை. ஒரே நேரத்தில் பலருடன் உறவில் (ஓபன் ரிலேஷன்ஷிப்) இருந்து வருகிறேன்.

காதல் என்பது எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும். என்னுடன் பழகும் நபர்களுக்கு நான் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது நன்றாகவே தெரியும் என்பதால், எங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை. இந்த உறவில் பொறாமை போன்ற உணர்வுகளை கையாள்வதற்கு அதிகமான மனமுதிர்ச்சி தேவை’ என்று தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: